கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பினருக்கும் கேக்கும், பிரியாணியும் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஸ்துமஸ் பண்டிகை என்பது கிருஸ்துவ மக்களுடன் அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாட வேண்டிய விழாவாகும். இதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது தேசிய முற்போக்கு திராவிட கழகமாகும்.
இந்த உணர்வுகளுக்கு ஏற்ப கிருஸ்துமஸ் நன்னாளில் (25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.
அந்த விழாவில் குழந்தைகளுடன் கிருஸ்துமஸ் கேக் வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கேக் வழங்குகிறேன். பின்னர் அனைத்து தரப்பினருக்கும் கேக்கும் பிரியாணியும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
விழாவை சிறப்பிக்கும் வகையில் தேமுதிகவினரும், ஆதரவாளர்களும், பொது மக்களும் அதில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment