திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.மண்டபத்தை சேர்ந்த இருளர் சமுதாய பெண்கள் லட்சுமி, ராதிகா, கார்திகா, வைகேஸ்வரி ஆகியோரை திருக்கோவிலூர் போலீசார் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 4 போலீசார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட 4 பெண்களுக்கும் தலா ரூ.5 லட்சம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நிவாரண நிதி காசோலை இன்று அவர்களிடம் வழங்கப்பட்டது.
இதற்காக 4 பெண்களும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் அமைச்சர் சி.விசண்முகம் தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கலெக்டர் மணிமேகலை, அரசு கொறடா ப.மோகன், எம்.எல்.ஏ.க்கள் ஜானகிராமன், அழகுவேல்பாபு, விழுப்புரம் நகரசபை தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். ரூ.5 லட்சத்தையும் வங்கி கணக்கில் போட்டு உடனடியாக பணமாக பெற்றுக் கொள்ளும் வகையில் காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment