ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி இன்று மதுரை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக எந்த தடை உத்தரவும் இல்லை. ஆனால் இது தொடர்பாக அ.தி.மு.க-தி.மு.க. ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக தமிழக- கேரள தீய சக்திகள் பிரச்சினைகளை கிளப்பி வருகிறது. முதல்வர் ஜெயலலிதா பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே உடனடியாக பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நல்ல முறையில் செல்கிறது. குற்றவாளியான கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததை விடுதலை கிடைத்ததுபோல கொண்டாடுகிறார்கள். அடுத்த விசாரணையின் போது கனிமொழியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு செய்வேன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா மீது குற்றச்சாட்டு உள்ளது போல மத்திய மந்திரி சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment