மம்பட்டியான், ஒஸ்தி படங்களை திரையிடமாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. “ஒஸ்தி” படம் வருகிற 8-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிம்பு, ரிச்சா ஜோடியாக நடித்துள்ளனர். தரணி இயக்கியுள்ளார்.
இந்தியில் ஹிட்டான டபாங்கின் ரீமேக்கே இப்படம். மம்பட்டியான் படத்தில் நாயகனாக பிரசாந்த், நாயகியாக மீராஜாஸ்மின் நடித்துள்ளனர். தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படங்களின் சேட்டி லைட் உரிமையை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களது டெபாசிட் தொகையை திருப்பித் தாராததால் இரு படங்களையும் திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவித்தது.
பின்னர் தியேட்டர் அதிபர்களுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் செய்திகள் வந்தன. இதனை திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் மறுத்தார். அவர் கூறும்போது, ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. இருபடங்களையும் திரையிட மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment