'காட்டிக் கொடுத்த' கருணா கோஷ்டியின் புத்தாண்டு விழாவில் சங்கீதா, ஜீவா, கிரிஷ்!
ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த வருடம் விடுதலைப் புலிகளுக்கு துரோகம் செய்து விட்டு ராஜபக்சேவுடன் கைகோர்த்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டும் புதுவாழ்வும் என்ற தலைப்பில் நியூசிலாந்தில் புத்தாண்ட விழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
கருணா கோஷ்டியினர் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அந்த நாட்டில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மூவரும் அந்த விழாவுக்கு செல்லக்கூடாது.
இலங்கையில் தமிழர்களின் இன அழிப்புக்கு கருணா முக்கிய காரணமாக இருக்கிறார். அவரை உலக தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். கருணா கோஷ்டியினர் நடத்தும் புத்தாண்டு விழாவுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈழத் தமிழர் அமைப்புகள் பலவும் இந்த விழாவில் தமிழ் நடிகர் நடிகைகள் பங்கேற்பதை கடுமையாக கண்டித்துள்ளன.
கனடா, ஸ்விஸ், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளும் இந்த மூன்று நடிகர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் தமிழ் படங்களில் பங்கேற்கும் இவர்கள் தமிழர்களின் இதயத்தை புண்ணாக்கக் கூடாது. இராமேஸ்வரத்தில் ஈழப் போர் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட ஜீவா,ஈழத் தமிழர்களின் மனதை புண் படுத்த மாட்டேன் என்று கொழும்பில் இருந்து எதிர்ப்பு காரணமாக நிக்ழ்ச்சிகளில் பங்க்கேற்காது திரும்பி வந்த கிரிஸ், சிந்திப்பார்களா?
ReplyDelete