பாலா தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நாயகனாக அதர்வா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எப்போதுமே பாலா படத்தின் நாயகனோ, நாயகியோ யாராக இருந்தாலும், அவர்களின் வழக்கமான திரை முகத்தை மாற்றி, முழுக்க முழுக்க வித்தியாசப்படுத்தி காட்டுவார் பாலா.
'அவன் இவன்' படத்தில் ஆர்யாவிற்கு இருப்பது போன்று அதர்வாவிற்கும் தலைமுடி அமைப்பை மாற்றி அமைத்து இருக்கிறார் பாலா. அதுமட்டுமல்லாது படம் முடியும் வரை கெட்டப் என்ன என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று அன்பு உத்தரவு போட்டு இருக்கிறாராம்
இந்நிலையில் படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது. இப்படத்தின் நாயகியாக 'காளை' படத்தில் சிம்புவுடன் நடித்த வேதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பாலா படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறாராம் வேதிகா. இப்படத்தின் மூலம் முன்னணி நாயகியாக வலம் வருவோம் என்று உறுதியாக நம்புகிறார் வேதிகா.

No comments:
Post a Comment