பாலிவுட்டில் சல்மான்கான் நடித்து வெற்றி பெற்ற 'தபாங்' படம், தமிழில் சிம்பு நடிக்க 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிடமாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த படத்தின் “சாட்டிலைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. முடிவில் இரண்டு தரப்பினர் இடையே சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, படத்தை குறிப்பிட்ட தேதியில் திரையிட அனைத்து சங்கங்களும் ஒத்துக் கொண்டன.
இதனால் சிம்புவின் 'ஒஸ்தி' படம், வரும் டிசம்பர் 8 அன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக இருக்கிறது
No comments:
Post a Comment