டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காப்பாற்றி இருக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி “டைட்டானிக்” என்ற பயணிகள் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற அந்த கப்பலில் 2,223 பேர் பயணம் செய்தனர்.
அக்கப்பல் புறப்பட்ட 4 நாட்களில் ராட்சத பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து கப்பலில் துளை ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த சுமார் 1496 பேர் உயிரிழந்தனர். இந்த மிகப்பெரிய விபத்தை அப்போது தவிர்த்து இருக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கப்பல் செல்லும் வழியில் ராட்சத பனிப்பாறை இருப்பதை கப்பலின் தலைமை அதிகாரி வில்லியம் முர்டோக் பார்த்து எச்சரிக்கை தகவல் கொடுத்தார். ஆனால் கப்பலை கட்டுப் படுத்தி ஓட்டிச் செல்வதற்காக மேற்புறத் தளத்தில் பணியில் இருந்த மற்றொரு பொறுப்பு அதிகாரியிடம் இருந்து மாலுமிகளுக்கு தகவல் வர 1/2 நிமிடம் தாமதமாகி விட்டது.
அந்த 1/2 நிமிட நேரமே கப்பல் ராட்சத ஐஸ் பாறையின் மீது மோதி விபத்து ஏற்பட காரணமாகி விட்டது. அந்த அதிகாரி ராட்சத ஐஸ் பாறை இருக்கும் தகவலை உடனடியாக தெரிவித்து இருந்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இதை பேன்ற மிகப்பெரிய விபத்துக்களும், இயற்க்கை சீற்றங்களின் போது ஏற்படும் பேரிழப்புகளும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலத்தாமதத்தாலும், கவனக்குறைவாலுமே நடக்கிறது என்பது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteபயனுள்ள தகவல். பதிவுக்கு நன்றி!
ReplyDelete