ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில் விடுதலையான கனிமொழி எம்.பி. நேற்று சென்னை திரும்பினார். இன்று காலை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- 6 மாதம் சிறையில் இருந்து விட்டு வந்துள்ளீர்கள், உங்கள் உடல் நிலை, மனநிலை எப்படி இருந்தது?
பதில்:- எனது உடல் நிலையும், மனநிலையும் நன்றாக இருக்கிறது.
கே:- தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா?
ப:- தலைவர் (கருணாநிதி) என்னை அரசியலுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அந்த அளவுக்கு நிச்சயமாக தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவேன்.
கே:- 2ஜி வழக்கு பற்றி உங்கள் கருத்து என்ன?
ப:- வழக்கை கழகமும், நானும் சரியான முறையில் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறோம். கட்சிக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள பேரை நீதி மன்றத்தில் சட்டப்படி சந்தித்து மீண்டு வருவேன்.
கே:- நேற்று திருவிழா போல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
ப:- தலைவரும், எனது கணவரும் மிகுந்த வருத்தம் அடைந்து இருந்தனர். இந்த நேரத்தில் எனது வலிகளுக்கும், கஷ்டங்களுக்கும் நேற்றைய வரவேற்பு மிகப் பெரிய மருந்தாக அமைந்தது.
சென்னை வந்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவரையும் சந்திக்க முடிந்தது. எல்லோரும் அன்போடு என்னை வர வேற்றது நெகிழ வைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment