தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், குறைந்த பட்ச மின் கட்டணமும், இரு மடங்காக உயர உள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்த பின், இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் முதல் அமலாகும்.
கடனில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள மின் வாரியத்தை காப்பாற்ற, கட்டண உயர்வு கோரி, மின் வாரியத்தில் இருந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு, டிச., 31க்குள், கட்டண உயர்வு குறித்து, தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மின் வாரியத்தின் புதிய முடிவுப்படி, தினமும் பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்துடன், மாதந்தோறும் கட்ட வேண்டிய குறைந்த பட்ச மின் கட்டண தொகையும், இரு மடங்காக உயர்த்த உள்ளது.அதாவது, மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை, கட்டாயமாக கட்ட வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இதற்கான கட்டணத் தொகைக்கு பரிந்துரை கோரி, மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. வீடுகளுக்கு, தற்போது இரு மாதங்களுக்கு வசூலிக்கப்படும், 40 ரூபாய் கட்டாய கட்டணம், 110 ரூபாயாக மாற்றப்பட உள்ளது. இதேபோல், அனைத்து வகை பயனீட்டாளர்களுக்கும், கட்டாய கட்டணம் உயர்கிறது.
No comments:
Post a Comment