தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் குஜராத் மாநில தூதராகவும் நியமிக்கப்பட்டார்.
மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை விளக்கி சுற்றுலா பயணிகளை கவர, முதலீடுகளை பெருக்குவதற்கான விளம்பர படங்களில் அவர் நடித்துள்ள காட்சிகள் தொலைகாட்சி, சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த சிலஅமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் கூறும்போது,
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கர்நாடகாவில் அவர் பிறந்திருந்தாலும் தமிழ் படங்கள் மூலம்தான் உயர்ந்த இடத்தை பிடித்தார். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக விஷயங்களில் அக்கறையுடன் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.
எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment