திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆவனவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (35). அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சங்கீதா (30). மகளிர் குழு தலைவி. இந்த குழுவில் செல்வி உறுப்பினர்.
மகளிர் குழு கூட்டம் கடந்த 20ம் தேதி நடந்தது. அப்போது செல்விக்கும், சங்கீதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த மாரியப்பனின் அக்கா சந்தியா, இவரது கணவர் சண்முகம் (அதிமுக கிளைச் செயலாளர்) ஆகியோர் சங்கீதாவுக்கு ஆதரவாக பேசினர். அப்போது சண்முகத்துக்கும் செல்விக்கு ஆதரவாக பேசிய உறவினர் பாண்டியன் (35, வார்டு உறுப்பினர் மற்றும் தேமுதிக கிளை செயலாளர்) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர்.
அப்போது சண்முகத்தின் காதை, பாண்டியன் கடித்ததாக கூறப்படுகிறது. காது அறுந்து தொங்கிய நிலையில் படுகாயமடைந்த சண்முகம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசில் சண்முகம் மனைவி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment