தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகை ஸ்ருதி ஹாசனுக்குப் பதில், நடிகை இலியானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா? என்று தெலுங்கு ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதிஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.
இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம்தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது. ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.
No comments:
Post a Comment