பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காலை முதல் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த் மாலையில் பேசுகையில்,
அம்மா என்றால் அன்பு என்று நான் பாடவில்லை. அந்த அம்மாதான் பாடினார்கள். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்: அந்த பால் விக்கிற விலைய பாரு.
கூடங்குளத்தில் 100வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் கேளுங்கள் என்ன பிரச்சனை என்று. உங்களை நம்பித்தானே கூடங்குளம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனை தீர்த்து வைக்குமாறு மத்திய அரசிடம் கூறுங்கள்.
திமுக தலைவரை பார்த்து மீனவர் பிரச்சனைக்கு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் போதுமா என்று ஜெயலலிதா கேட்டார்கள். இப்போது ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருக்கிறார். அதே மீனவர் பிரச்சனைக்கு ஜெயலலிதா கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றார்.
No comments:
Post a Comment