இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 590 ரன் குவித்தது. டாரன் பிராவோ 166 ரன்னும், எட்வர்ட்ஸ் 86 ரன்னும், போவெல் 81 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 5 விக்கெட்டும், வருண் ஆரோன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 67 ரன்னிலும், லட்சுமண் 32 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. லட்சுமண் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தெண்டுல்கர் 94 ரன்னிலும், கேப்டன் டோனி 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
331 ரன்னில் இந்தியா 6 விக்கெட்டை இழந்தது. 7-வது விக்கெட்டுக்கு கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த இரண்டு பேரின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது. விராட் கோலி 52 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்த வந்த வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் களத்தில் நின்று விளையாடி வரும் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். 117 பந்துகளை சந்தித்த அஸ்வின் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி, சதத்தை எட்டினார். இது இவருக்கு இரண்டாவது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த போட்டியில் 100-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 94 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய அஸ்வின் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓஜா ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.
No comments:
Post a Comment