உடல்நலம் தேறிய பிறகு ரஜினி பார்த்த முதல்படம் ஏழாம் அறிவு! அதன்பிறகு தற்போது தனது மருமகன் தனுஷ், ரிச்சா காங்கோ பாத்யாய் நடிப்பில், செல்வராகவன் இயக்கும் மயக்கம் என்ன படத்தை பார்த்தார் ரஜினி!
நவம்பர் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தப் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ரஜினி குடும்பத்தினருக்கு மட்டும் ராயப்பேட்டையில் உள்ள ரியல் இமேஜ் ப்ரிவியூ தியேட்டரில் மயக்கம் என்ன படம் திரையிடப்பட்டது. படத்தைப் ரசித்துப் பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். தனுஷ் நடித்த படங்களின் வரிசையில் மயக்கம் என்ன முக்கியமானதாக இருக்கும். செல்வராகவன் தமிழின் க்ரியேட்டிவ் இயக்குனர்களில் ஒருவர் என்று பாராட்டி இருக்கிறார்.
ஆனால் இயக்குனர் செல்வராகவன் அங்கு வராமல் படத்தின் வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததால் அவரை போனில் தொடர்புகொண்டு பாராட்டினாராம். ப்ரிவியூ வளாகத்தில் இருந்தே! நீண்ட நேரம் செல்வராகவனிடம் மயக்கம் என்ன படத்தைப் பற்றி விவாதித்த ரஜினி, “ மேலே இருப்பவன் அனுமதித்தால் நாம் நிச்சயமாக ஒரு படம் பண்ணலாம் செல்வா!” என்றாராம் ரஜினி. இதைச் சொல்லி சொல்லி ஆனந்தப்படுகிறது மயக்கம் என்ன படக்குழு!
No comments:
Post a Comment