சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள கண்ணகி நகரில் மளிகை கடை வைத்திருக்கும் மணிகண்டன் (வயது 26) என்பவருக்கும், ஓமலூர் பக்கம் உள்ள பண்ணப்பட்டி குதிரைபள்ளம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரின் மக்கள் சிந்துஜா, வயது 21 என்பவரும் நீன்ட நாள காதலர்கள்.
இவர்களின் காதலுக்கு சிந்துஜாவின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு ஓமல்லோரில் நண்பர்களின் துணையோடு தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.
திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர், ஒரு நாள் சிந்துஜாவின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நீ வீட்டை விட்டு வந்த பின்னர் உனது நினைவாகவே அம்மா இருக்கிறார் என்றும், நீ மட்டும் ஒருமுறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு வரலாம் என்று ராஜு வந்து தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.
இப்போது வருவார், காலையில் வருவார் என்று மணிகண்டன் காத்திருந்தார், ஆனால், போன சிந்துஜா திரும்பி வரவே இல்லை. இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிந்துஜாவிடம் இருந்து மணமுறிவு (விவாகரத்து) கேட்டு வழக்குறைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
வாழவெட்டியா போறதுக்கு பொம்பளையே தயாரா இருக்கும் போது உனக்கு என்னடா..? நீ ஆம்பாளை சிங்கம் உனக்கு இன்னும் நாலு கல்யாணம் செய்யலாமடா தம்பி என்று மணிகண்டனின் உறவினர்கள் சொல்ல, சிந்துஜாவின் விருப்பப்படி தனக்கும் மணமுறிவு செய்துகொள்ள சம்மதிப்பதாக மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மணிகண்டன்.
கடந்த ஒன்னரை வருடமாக மணமுறிவு வழக்கு நடந்து வந்தது. ஒவ்வொரு வாய்தாவிற்க்கும் மணிகண்டனும், சிந்துஜாவும் மேட்டூர் நீதிமன்றத்துக்கு வந்தாலும், இருவரும் பக்கத்தில் நெருங்காதபடி பார்த்துக்கொண்டார் சிந்துஜாவின் அப்பா ராஜு.
24.11.2011 அன்று மதியம் நீதிமன்றத்துக்கு வந்த சிந்துஜாவையும் மணிகண்டனையும் அழைத்த நீதிபதி ஜெயந்தி அவர்கள், நீங்கள் இருவரும் பிரிந்து செல்ல சம்மதிக்கின்றீர்களா..? என்று கேட்டுள்ளார்.
அப்போது காதல் மனைவியை கண்களால் மணிகண்டன் பார்த்துள்ளார். மணிகண்டனை நேருக்கு நேராக சிந்துஜா பார்த்துள்ளார். எனக்கு விருப்பம் இல்லை என்று இருவரின் கண்களும் பேசியது...
என்ன குழப்பம்...? உங்களை பிரிந்து போக சொல்லி யாராவது நிர்பந்தம் செய்கிறார்களா..? தைரியமாக சொல்லுங்கள் நீங்கள் பிரிந்து போக மனப்பூர்வமாக சம்மதிக்கிறீர்களா..? என்று மீண்டும் அழுத்தி கேட்டுள்ளார் நீதிபதி.
எனக்கு என்னுடைய மனைவியை பிரிய விருப்பம் இல்லை... என்னையும், என்னுடைய தாயாரையும் மிரட்டி “நீ விவாகரத்து கேட்டு கோர்ட்டுல கேஸ் போட்டு என்று மிரட்டினார்கள் அதனால் தான் நான் இந்த கோர்ட்டுல மனுதாக்கல் செய்தேன் என்று சொல்லியுள்ளார் மணிகண்டன்.
சிந்துஜாவிடம், நீ என்னம்மா சொல்லறே ...? என்று நீதிபதி கேட்க... சிந்துஜாவும், நான் என்னுடைய கணவருடன் தான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்... ஆனால், என்னுடைய அப்பாதான் எங்களை பிரிக்கிறார், “எங்களை நீங்கள் தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சொல்லி விட்டார்.
மணிகண்டன், சிந்துஜா இருவரும் போட்ட விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயந்தி, மேட்டூர் காவல் ஆய்வாளரை நீதிமன்றத்துக்கு அழைத்து இருவரையும் சேர்ந்து வாழ தேவையான பாதுகாப்பை இருவருக்கும் கொடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
விவாகரத்து வாங்க வந்த காதல் திருமண தம்பதிகளை, நீதிமன்றத்திலிருந்து மேட்டூர் போலீசார் பாதுகாப்புடன் ஓமலூருக்கு அழைத்து வந்து மணிகண்டனின் வீட்டில் விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment