முன்னாள் சோவியத் ரஷியாவின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். இவரது ஒரே மகள் ஸ்வெட்லனா அல்லி லுயேவா (85). அமெரிக்காவில் தங்கியிருந்த அவர் தனது பெயரை லானா பீட்டர்ஸ் என மாற்றிக் கொண்டார்.
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் தனது மகள் ஓல்காவுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர். லானா பீட்டர்ஸ் கடந்த 1967-ம் ஆண்டு சோவியத் யூனியனின் நல்லெண்ண தூதரக அமெரிக்கா வந்தார்.
மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்து கடந்த 1949-ம் ஆண்டு பட்டம் பெற்றார். தொடக்கத்தில் ஆசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த அவர் 4 புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் 2 புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளன,
மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்து கடந்த 1949-ம் ஆண்டு பட்டம் பெற்றார். தொடக்கத்தில் ஆசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த அவர் 4 புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் 2 புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளன. இவருக்கு 4 முறை திருமணம் நடந்தது. அவரது 3 கணவர்கள் ரஷியாவை சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவுக்கு வந்த பின்னர் கட்டிட கலை நிபுணர் வில்லியம் வெஸ்லி பீட்டர்ஸ் என்பவரை 4-வதாக மணந்தார். அதன் பின்னர்தான் ஸ்வெட்லனா அல்லிலுயேவா என்ற தனது பெயரை லானா பீட்டர்ஸ் என மாற்றிக் கொண்டார்.
No comments:
Post a Comment