பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பஸ் நிலையம் அருகே நடந்தது. பகுதி செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் உதயசூரியன், மாரி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:
தமிழக மக்கள் உண்மையிலேயே பரிதாப சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள். தமிழக முதல் அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடக நீதிமன்றத்துக்குப் போய், 1400 கேள்விகளுக்கு பதில் கொடுத்திட்டு வந்தாங்க. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் அந்த அம்மாவ பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்க. அந்தக் கேள்விக்கு அந்த அம்மா பதில் கொடுக்கவில்லை.
கொடுக்கமாட்டாங்க என்று எங்களுக்கு நல்லாவே தெரியும். ஏன்னென்றால் பதில் என்ன என்பது அவர்களுக்கே தெரியவில்லை. அந்த கேள்வி என்ன கேள்வி. தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து மக்களும் அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து, ஏன் எங்களை பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியை கேட்டுக்கிட்டு இருக்காங்க. நாங்களும் கேட்கிறோம் ஏன் இந்த பழி. திமுகவினர் மீது பழிவாங்கிக்கிட்டு இருக்கீங்க. அது எல்லோருக்கும் தெரியும். ஏதோ ஒரு பொய் வழக்கை போட்டு திமுகவில் இருப்பவர்களை கைதுசெய்துவிட்டு அவர்கள் மேல் கேஸ்
போட்டுக்கிட்டு இருக்கீங்க. எல்லமே பொய் வழக்குகள். இந்த 6 மாதத்துல தமிழக மக்களுக்கும் போர் அடிச்சு போச்சு.
தினமும் பேப்பரை பார்த்தா, யாரோ ஒருத்தரை பொய் வழக்கை போட்டு கைது செய்றாங்க. இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்லையன்னு நினைக்கிறாங்க. உண்மையிலுமே வேற எந்த வேலையும் இல்லையின்னு நினைக்கிறேன். ஏன்னென்னா காலை காத்தால காப்பி குடிச்சது முதல் இன்னைக்கு யாரை கைது செய்து, என்ன பொய் வழக்கு போடுறது. அந்த நினைப்புலத்தான் இருக்காங்களே தவிர, இன்னைக்கு தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டம் கொண்டு வரணும் ஒரு எண்ணம் சிந்திக்கிற அளவுக்கு புத்தி இல்லையென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், மனசு இல்லையென்றுதான் சொல்லுவேன்.
கலைஞர் ஆட்சியில், 5 வருட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியோட, மகிழ்ச்சியோட, சந்தோஷமாக, மரியாதையோட வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஆனால் இன்னைக்கி அதே மக்கள், கண்ணிர் விட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு காரணம் யார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தான். தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் ஒரு பெரிய தமிழ்ப்பாட்டு பரவிக்கிட்டு இருக்கு. பெரிய ஹிட் ஆகியிருக்கு. எங்கப்போனாலும் அந்தப் பாட்டைத்தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க எல்லாரும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அந்த பாட்டைப் பாடும்போது உண்மையிலேயே அம்மையாரை ஜெயலலிதா பார்த்துதான் பாடுறாங்க என்று நினைக்கிறேன். ஒய் திஸ் கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறிமா. ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு. தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டாங்க. அதுக்காக இந்த கொலைவெறியா.
அதிமுகவினர் ஒருத்தருக்கிட்ட நான் கேட்டேன். ஏங்க இப்படி பழிவாங்கிக்கிட்டு இருக்கீங்க மக்களுக்கிட்ட. அவுங்க சொல்றாங்க, ஐ, 1996ல எங்களுக்கு ஓட்டுப்போடல, 2006ல எங்களுக்கு ஓட்டுப்போடல அதுக்கு நாங்க பழி வாங்க வேண்டாமா. ஏப்பா பழி வாங்குறத்துக்கா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க. நீங்க ஏதோ நல்லது செய்வீங்க என்றுதான் ஓட்டு போட்டாங்க.
நீங்கள் எல்லோரும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தீங்க. ஒரு மாற்றம் வந்தா நல்லாயிருக்கும். ஐந்து வருஷம் கலைஞர் ஆட்சியில எல்லாத்தையும் நீங்க பார்த்திட்டீங்க. சரி ஒரு சின்ன மாற்றம் வரட்டும் என்று நீங்க ஆசைப்பட்டு அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்சீங்க. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைச்சது என்ன வெறும் ஏமாற்றம்தான். வெறும் ஏமாற்றத்தில்தான் தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஏன். நாம இவ்வளவு சொல்லிக்கிட்டு இருக்கோம். ஒரு கேள்விக்கு பதில் வரல. இதுக்கு முன்னாடி தேர்தல் பிரச்சாரத்தில் அந்த அம்மா எவ்வளவு பொய் சொன்னாங்க. நான் இத தரப்போறேன். அதச் சொல்லப்போறேன். நான் இதைச் செய்யப்போறேன் உங்களுக்கு.
இதுவரைக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தாங்களா. இதுவரைக்கும் தமிழ் மக்களுக்காக ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்திருக்காங்களா. தமிழ்நாட்டு மக்களிடம் நான் கேட்கிறேன். இந்த 6 மாதத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டம் என்ன. யாராவது சொல்ல முடியுமா. யாராலும் சொல்ல முடியாது. ஏன்னா நல்ல திட்டம் கொண்டுவரவில்லை.
மே 13ம் தேதி தேர்தல் ரிசல்ட் வந்த உடனே காலை 10 மணிக்கு கலைஞர் வீட்டுக்கு கோபாலபுரம் போனேன். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு வெளியே வரும்போது, சுத்தியிருந்த பேப்பர்காரங்க என்னை கேட்டாங்க. திமுக தோல்விக்கு என்ன காரணம் என்ன என்று நினைக்கறீங்க. தைரியமா சொன்னேன். இது திமுகவின் தோல்வி கிடையாது. திமுகவுக்கு என்னைக்குமே தோல்வி கிடையாது. இது தமிழ்நாட்டு பொதுமக்களின் தோல்வி. அதுக்காக அதிமுககாரங்க வழக்கம்போல பலபேர் வழக்கு போட்டாங்க. பரவாயில்ல. வழக்கு போட்டு என்ன பண்ண போறீங்க. ஜெயில்ல தூக்கி போடுவீங்களா. உண்மையை பேசுறத்துக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தப்பு செய்திருந்தா பயப்புடுவோம். உண்மையை பேச திமுகவினருக்கு தைரியம் இருக்கு. உண்மையே பேசனும். அதற்கான விளைவு தெரியுது நமக்கு எல்லோருக்கும்.
தேர்தல் பிரச்சாரத்தில், விலைவாசி ஏறுவதற்கு காரணம் திமுக: மின்சாரம் இல்லை. தமிழ்நாடு பூரா இருட்டில் மூழ்கி கிடக்கு. அதற்கு காரணம் திமுக. எல்லாத்துக்கும் திமுக திமுக திமுக என்று சொல்லிதான் நீங்க பழி சுமத்திக்கிட்டு இருந்தீங்க.
ஆனால் இன்னைக்கி நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. காவல்துறையினர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. காவல்துறையினர் எங்க தப்பு நடக்குதோ, அங்கு தட்டி கேட்காம, மேலிடத்தில் இருந்து என்ன உத்தரவு வருதோ அதப்பாத்துட்டு வந்து திமுகவினரை கைது செய்யறதுல அவுங்க பிஸியாக இருக்காங்கன்னா, மக்களுடைய நன்மைக்காக, மக்களுடைய பாதுகாப்புக்காக அவுங்களுக்கு எங்க நேரம் கிடைக்கப்போகுது? இவ்வாறு பேசினார்.
தமிழன் தூங்குகிறான்.தமிழனுக்கு புத்திமதி கூறும் ஆப்கான் ஆரியப் பொண்ணு . தமிழனுக்கு வெட்கமில்லை மானமில்லை ரோசமில்லை.
ReplyDelete