சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஒஸ்தி'. தரணி இயக்க, தமன் இசையமைக்கிறார். சோனி நிறுவனம் இப்படத்தின் இசையை வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெகு விமர்சையாக அக்டோபர் 19ம் தேதி நடத்த இருக்கிறார்கள். முதலில் ஒரு பாடலை மட்டும் வெளியிடலாம் என்று திட்டமிட்டார்கள். பின்னர், அக்டோபர் 6ம் தேதி எல்லா பாடல்களும் கொண்ட ஆல்பத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ஆனால் இசை பணி முடியாததால் தற்போது 19ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டன. ஒரு பாடலும், க்ளைமாக்ஸில் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. அடுத்த வாரத்தில் சிம்பு மற்றும் ரிச்சா பங்குபெறும் பாடல் ஒன்றை படமாக்க வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். 'டபாங்' இந்தி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சல்மான்கான் தனது 6 பேக்ஸ் உடற்கட்டை காட்டி நடித்திருப்பார். அதைப் போலவே 'ஒஸ்தி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக 25 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்தாராம் சிம்பு.
தீபாவளிக்கு படத்தை வெளியிட முயன்றார்கள். ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடியாததால் நவம்பர் மாதத்தில் வெளியிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment