இன்னும் 3 அல்லது 4 நாட்களில் எனது மெளன விரத்தை முடித்து கொண்டு ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என அன்னா ஹசாரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டெல்லியில் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மூலம் மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 16ம் தேதியில் இருந்து அன்னா ஹசாரே மெளன விரதம் இருந்து வருகிறார். இதனால் தனது கருத்துகளை இணையதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே தனது இணையதள பக்கத்தில் கூறியதாவது, எனது அன்பான சகோதர சகோதரிகளே, எனது மெளன விரதத்தை முடித்து கொள்ளும் எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனது இணையதள பக்கத்தை தினமும் உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் படிக்கின்றனர். இன்னும் 3 முதல் 4 நாட்களில் எனது மெளன விரத்தை முடித்துக் கொண்டு, விரைவில் மக்களுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
நாட்டில் ஊழலை ஒழிக்கும் எனது போராட்டம் மூலம் உலகமெங்கும் உள்ள இளைஞர், வேலை செய்பவர்கள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களின் அறிமுகம் கிடைத்ததுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் வகையி்ல் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அப்போது ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த மக்களை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது மெளன விரத்தை விரைவில் முடித்து கொண்டு, பல மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் கலந்து ஆலோசிப்பேன்.
நாட்டின் பல தரப்பு மக்களை சந்திப்பதன் மூலம் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தேவையான சக்தி மேலும் அதிகரிக்கும். இந்த சுற்றுப்பயணம் மூலம் என் நாட்டு மக்களில் ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் என்னோடு இணைந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
வேட்பாளர்களை நீக்குவது மற்றும் திரும்ப அழைக்கும் கோரிக்கையை தொடர்ந்து முன்வைப்பேன். இந்த சுற்றுப்பயணம் மூலம் கடந்த முறையை காட்டிலும் அதிக ஆதரவை பெற முடியும் என நம்புகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment