தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ராமசாமி கூறுகையில், கட்டண உயர்வை அறிவித்து விட்டு, அதை முறைப்படி மக்களுக்கு என்று முதல் அமலாகிறது என்பதைச் சொல்லாமல், இரவோடு இரவாக, ஏதோ திருடர்கள் போல அமல்படுத்தியுள்ளனர். இது சட்டவிரோதமானது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதை நீதிபதிகள் ஏற்று செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் என்றார்.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது கட்டண உய
No comments:
Post a Comment