சிம்பு நீண்டநாட்களாக நடித்து வரும் ' போடா போடி '. வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து வருகிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
சிம்பு நடிப்பில் டிசம்பர் 8ம் தேதி வெளிவர இருக்கும் படம் 'ஒஸ்தி'. விக்ரம் நடிப்பில் 16 அல்லது 23ம் தேதி வெளிவர இருக்கும் படம் 'ராஜபாட்டை'.
விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் ராஜபாட்டை படத்தின் மொத்த உரிமையும் ஜெமினி நிறுவனம் வாங்கிவிட்டது. இதனால் மிகவும் கோபமாக இருக்கிறாராம் சிம்பு.
சென்னையில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ' போடா போடி ' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வந்த சிம்பு ' ராஜபாட்டை' படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி இருக்கிறது என்ற செய்தியை கேட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டாராம்.
தனது ' ஒஸ்தி ' படம் வெளியாகி ஒரே வாரத்தில் ஜெமினி நிறுவனத்தின் ' ராஜபாட்டை ' படம் வெளியிடுவதால், தனக்கு போட்டியாக வெளியிடுகிறார்கள் என கடும் கோபத்தில் இருக்கிறார் சிம்பு என்கிறது கோலிவுட் வட்டாரம்.
படப்பிடிப்பில் இருந்து சிம்பு கிளம்பிய சிறிது நேரத்தில் டி.ராஜேந்தர், எஸ்.டி.ஆருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு ஜெமினி நிறுவனத்தினருக்கு லெட்டர் அனுப்பி வைத்து இருக்கிறார்.
எப்போது தான் வெளியாகுமோ ' போடா போடி' !
No comments:
Post a Comment