இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி கடந்த செப்டம்பர் மாதம் இறந்தார். அரியானா மாநிலம் பட்டோடி பகுதியின் நவாப் பாக அவர் இருந்தார். தந்தை மன்சூர் அலிகான் இறந்ததால் அவரது மகன் நடிகர் சயீப் அலிகான் புதிய நவாப்பாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பட்டோடி பகுதியின் 10-வது நவாப்பாக அவர் பொறுப்பேற்றார். இதற்கான பாரம்பரிய நிகழ்ச்சியில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தலைப்பாகை அணிவித்தனர். 52 கிராம மக்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தந்தையின் எஸ்டேட், கண் மருத்துவமனை, அறக்கட்டளை உள்பட பல நிறுவனங் களை சயீப் அலிகான் கவனிப்பார். இந்த நிகழ்ச்சியில் அரியானா முதல்- மந்திரி பூபிந்தர்சிங் ஹுடா, சயீப் அலிகானின் தாயார் ஷர்மிளா தாகூர், சகோதரிகள் சோகா, சகா ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment