‘18 வயசு’ படத்தில் அரவாணிகளின் பிரச்னைகளை சொல்லும் பாடல் இடம்பெற்றுள்ளதாக இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் கூறினார். ‘ரேனிகுண்டா’ படத்துக்குப் பிறகு பன்னீர்செல்வம் இயக்கும் படம், ‘18 வயசு’. இதில் ஜானி ஹீரோ. காயத்ரி ஹீரோயின். மேலும் சத்தியேந்திரன், ஜே.எஸ், கிருஷ்ணா டாவின்ஸி உட்பட பலர் நடிக்கின்றனர். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். தினேஸ்- சார்லஸ் பாஸ்கோ இசை அமைக்கின்றனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனின் காதல் கதைதான் இது. இதன் திரைக்கதை புதுமையாக இருக்கும். ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை பல்வேறு த்ரில்லர் கதைகள் வந்திருக்கிறது. அந்த வகை கதைகளிலிருந்து, வித்தியாசமான த்ரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதன் மேக்கிங் பேசப்படும் விதமாக இருக்கும். அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இதுவரை அரவாணிகள் பற்றிய பாடல் வந்ததில்லை என நினைக்கிறேன். அவர்களின் வலியை குறிப்பிடும் விதமாக பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியுள்ளார். ‘ஆணுமில்ல, பொண்ணுமில்ல, ஆனா, நாங்க நடுவுல’ என்கிற அந்தப் பாடல் நெஞ்சை உருக்குவதாக இருக்கும். இந்தப் பாடல் காட்சியில் 25 அரவாணிகள் நடித்துள்ளனர். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இன்னும் பத்து நாள் ஷூட்டிங் இருக்கிறது. முடிந்ததும் படம் வெளியாகும். இவ்வாறு ஆர்.பன்னீர்செல்வம் கூறினார்.
No comments:
Post a Comment