க்யூட் ஹீரோ சல்மான் கானுக்கும் தமிழ்நாட்டுக்கும் அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது சமீபகாலமாக. தமிழில் வெளிவரும் படங்களை கூர்ந்து கவனித்து வருகிறார் சல்லுபாய். காரணம், காப்பியடிக்கலாமே என்ற ஆசைதான்.
ஸ்டண்ட் இயக்குனர் பெப்ஸி விஜயனின் மகன் ஹீரோவாக நடித்த மார்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னைக்கே வந்திருந்தார் சல்லு. அதன்பின்பு சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ஒஸ்தி படம் கூட சல்மான்கானின் தபாங் படத்தின் ரீமேக்தான். இதற்காக சில டிப்ஸ்களை கேட்க சிம்பு பிரியப்பட்டதும், சல்லு அவரை சந்திக்க மறுத்ததும் தனி டிராக்.
சரி மொன்னையை விட்டுவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வருவோம். லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் ரீமேக்கில் சல்மான்கான்தான் நடிக்கப் போகிறார். அட இதுவும் பழசுதானே என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு இந்த புதிய செய்தி.
சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படத்தை இந்தியில் ரீமேக் பண்ண துடிக்கிறார் சல்மான். ரீமேக் ரைட்ஸ் வாங்க பேச்சு வார்த்தையும் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.
இதே போட்டியில் அமீர்கானும் இருக்கிறார். இவருக்கும் முருகதாசுக்கும் இந்தி கஜினி மூலம் தொடர்பிருப்பதால் சல்மானை விட அமீருக்கே வாய்ப்பு அதிகம் இருக்கக் கூடும்.
தமிழ்நாட்டுக்காரன் புகழடைவதை விரும்பாத வட இந்தியக்காரர்கள் போதிதர்மனை தமிழனாக தான் காட்ட போகிறார்களா! அல்லது வட இந்தியராக காட்டி வரலாற்று பிழையை நிகழ்த்தப்போகிரார்களா!!
No comments:
Post a Comment