சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை.
ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது.
இது குறித்து ஏ.ஆர்.முருகதாசிடமே பேசிவிடலாம் என்று அவரை தொடர்பு கொள்ளும் அத்தனை நிருபர்களுக்கும் கிடைக்கிற ஒரே பதில், ’சுவிட்ச்டு ஆஃப்’ என்ற கதவடைப்பு வார்த்தைகள்தான். யாராவது மூத்த தமிழறிஞர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டால் மீதி தலைமுடியாவது மிச்சமாகும். சீக்கிரமா செய்ங்க ஐயா...
இது படம் பார்க்க வரும் கூட்டத்தை அதிகப்படுத்த கையாளும் தந்திரமாக கூட இருக்கலாம் ....!
No comments:
Post a Comment