ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அசோகன். இவரே தயாரித்து இவரே இயக்கி வரும் படம்தான் கம்பன் கழகம். நானும் முருகதாசும் ஒரே ஊர். கள்ளக்குறிச்சி. சினிமா மீது காதலாகி அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கஜினி வரைக்கும் வொர்க் பண்ணினேன். வெளியில் வந்து ஒரு தயாரிப்பாளரை தேடி அவரை கன்வின்ஸ் பண்ணி.... இதையெல்லாம் நினைக்கும் போதே பெரிய பிராசஸ் ஆக இருக்கும்னு தோணுச்சு. அது மட்டுமல்ல, என்னை நானே நம்பலைன்னா அப்புறம் யாரு நம்புவாங்க? அதனால் நானே சொந்த படம் எடுக்கிறதுன்னு முடிவு பண்ணினேன். திடீர்னு ஒரு நாள் முருகதாசிடம் போய், சார் நான் இப்படி ஒரு படம் எடுக்கிறேன். அதுவும் சொந்தப்படம் என்று சொன்னதும் ஆச்சர்யப்பட்டார். ஜாக்கிரதையா பண்ணு என்று அட்வைஸ் பண்ணினார் என்று சொல்லிக் கொண்டே போகிறார் அசோகன்.
நான்கு நண்பர்கள். ரெண்டு நண்பிகள் கதைதான் இது. படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரிக்கு போயிருந்தபோது ‘அதென்ன கம்பன் கழகம்?’ என்று கேட்டாராம் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒருவர். அவரிடம் முழு கதையையும் சொன்னாராம் அசோகன். நானும் கம்பன் கழகத்தின் மதுரை கிளையின் தலைவரா இருக்கேன். எங்கே நம்ம கழகத்துக்கு களங்கம் வருவது மாதிரி எடுத்துருவீங்களோன்னு பயந்து கொண்டிருந்தேன். ஆனால் உங்க கதை அருமையா இருக்கு என்று பாராட்டினாராம் அவர். இப்படி முகம் தெரியாத நபர்களுக்கெல்லாம் கதை சொன்ன இந்த டைரக்டர், நம்மிடம் கதை சொல்ல மட்டும் ஏகத்திற்கும் தயங்கினார்.
சரி... அதை விடுங்கள். இந்த படத்தில் நடிக்கும் ஹீரோவும் ஹீரோயினும் நிஜத்திலேயும் காதலர்களாம். கல்யாணத்தையும் பட யூனிட்டே நடத்தி வைக்குமா என்ற கேள்வியை சம்பந்தபபட்ட ரெண்டு பேருமே ரசிக்கவில்லை. படம் ஹிட்டுன்னா, பத்து படமாவது நடிச்சுட்டு கல்யாணம் செஞ்சுக்கலாமே என்று நினைத்திருப்பார்களோ?
No comments:
Post a Comment