தங்கள் ஊரில் முன்பெல்லாம் குடிகாரர்களை கோயில் தூணில் கட்டிவைத்து அடித்து திருத்துவோம் என்று அண்ணா ஹஜாரே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கோரி அகிம்சை முறையில் போராடி வரும் அவர், என்.டி.டி.வி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "எங்கள் ஊரில் முன்பெல்லாம் மது அருந்துபவர்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுப்போம்.
அந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அவர் திருந்தவில்லையெனில், கோயிலுக்கு இழுத்து வந்து 'இனி வாழ்நாளில் குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்ய வைப்போம். அதன் பிறகும் திருந்தவில்லை என்றால், கோயிலுக்கு அருகில் உள்ள தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடிப்போம்," என்று ஹஜாரே கூறினார்.
அண்ணா ஹஜாரேவுக்கு செல்வாக்கு ஓங்கியிருந்த கிராமத்தில் இருந்த இந்த நடைமுறை, அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, 'தலிபான்கள் இதுபோன்றுதான் கூறினார்கள்," என்றார்.
மது அருந்துபவர்களைக் கையாள இந்த அணுகுமுறை சரியான வழியல்ல என பிஜேபி கூறியுள்ளது.
என்ன இது படிக்கிறது வேதம் இடிக்கிறது கோயில் என்ற கதையாக இருக்கு.
ReplyDelete