விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, November 23, 2011

    வளர்ப்பு மகன் திருமண செலவு ரூ.6 கோடி நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை


    சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆஜரானார். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவு ரூ.6 கோடி பற்றி அவரிடம் சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன. ‘நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை’ என்று அவர் பதில் அளித்தார். ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு 6 ஆண்டுகளாக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.  முக்கிய கட்டமாக குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313ன் கீழ் கேள்வி பதில் விசாரணை இப்போது நடக்கிறது.

    மொத்தமுள்ள 252 சாட்சிகளின் அடிப்படையில் 1384 கேள்விகள் தயார் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா 1339 கேள்விகளுக்கு பதிலளிக்க  வேண்டும். கடந்த மாதம் 20, 21 தேதிகளில் அவரிடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டது. மீதமுள்ள கேள்விகள் நவம்பர் 8ம் தேதி கேட்கப்படும் என நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து, பெங்களூர் பரப்பன அக்ரஹகார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர். இளவரசி ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. மாலை 5.20  மணிவரை 580 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார். ஜெயலலிதாவின் வங்கி கணக்குகள், பங்கு பரிவர்த்தனை, சுதாகரன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து நீதிபதி கேட்டார்.

    அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதிலளித்தார். மொத்த கேள்வி களும் முடியாததால் விசாரணை புதன்கிழமையும் தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 192 கேள்விகளுக்கு ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்.

     விசாரணை முடிந்து வெளியே வந்த அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது: 
    உச்ச நீதிமன்ற உத்தரவு  பேரில் 3ம் நாளாக ஜெயலலிதா இன்று ஆஜரானார்.  காலை 11 மணி தொடங்கி மாலை 5.20 மணிவரை நீதிபதி கேள்விகளை கேட்டார். இன்று 580 கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை அவரிடம் 1147 கேள் விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னும் 192 கேள்விகள் பாக்கி உள்ளது. நாளை அந்த கேள்விகளும் கேட்கப்படும்.

    இன்று அவர் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6 கோடி செலவு செய்தது தொடர்பான கேள்விக்கு, ‘நான் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. முழு செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டனர்’ என்று பதிலளித்தார். மேலும், வங்கி கணக்கு, தொழிற்சாலைகளில் பங்கு தொடர்பான கேள்விகளுக்கு ‘நான் எதிலும் முதலீடு செய்யவில்லை. என் மீது பற்று கொண்டவர்கள் என் பெயரை சேர்த்திருக்கலாம். எனக்கு தெரியாது’ என்று பதிலளித்தார்.

    தொண்ணூறு சதவீத கேள்விகளுக்கு ‘எனக்கு தெரியாது’ அல்லது ‘நினைவில்லை’ என்று பதிலளித்தார். இவ்வாறு ஆச்சார்யா தெரிவித்தார்.
    ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார் கூறும்போது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் தெளிவாகவும் நிதானமாகவும் பதிலளித்தார். நாளை மீதியுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றார்.

    பரப்பன அஹ்ரகார சிறைச்சாலை வளாகம் மற்றும் வளாகத்துக்குள் செல்லும் நுழைவு வாயில் ஆகிய பகுதிகளில் நேற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த முறை ஜெயலலிதா வந்தபோது அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டதால் இந்த முறை குடியிருப்புவாசிகளுக்கு அடையாள பாஸ் வழங்கப்பட்டது.

     நீதிமன்றத்துக்குள் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என்று பல வக்கீல்கள் காலை 8 மணிக்கே வந்திருந்தனர். ஆனால் அவர்களை போலீசார்  அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஆஜராகி வரும் மூத்த வக்கீல் பி.குமார், ராஜன், கந்தசாமி, சரவணகுமார், பால்கனகராஜ், விவேகவாணன், விஜயராஜ் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
     சென்னை மேயர் சைதை துரைசாமி மதியம் 1 மணிக்கு வந்தார். அவர் யார் என்று போலீசாருக்கு தெரியாததால் முதலில் அனுமதிக்கவில்லை. மேயர் என்று தெரிந்தபின் உள்ளே நடந்து செல்ல அனுமதித்தனர். சாலையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மேயர் நடந்து சென்றார்.

    25 கார்கள் புடைசூழ

    நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜெயலலிதா நேற்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் சசிகலா மட்டும் வந்தார். விமான நிலையத்திலிருந்து 25 கார்கள் புடைசூழ ஜெயலலிதா கார் சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தது. 10.35 மணிக்கு அவர் சிறப்பு நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தார்.

    சென்னை சாப்பாடு

    மதியம் 1.45 மணியளவில்  நீதிமன்றம் மதிய இடைவேளை அறிவித்தது. உணவு கொண்டு வரப்பட்டது. அதை இருவரும் கேரவனில் இருந்தவாறு சாப்பிட்டனர். அந்த சாப்பாடு சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டது என கட்சிக்காரர்கள் கூறினர்.

    15 நிமிடம் காத்திருந்தார்

    சிறப்பு நீதிமன்றத்துக்கு 10.40 மணிக்கு வந்த ஜெயலலிதா உடனடியாக நீதிமன்றத்துக்குள் செல்லவில்லை. விசாரணை 11 மணிக்கு என்பதால் நீதிமன்றத்துக்கு நீதிபதி வரும்வரை காரில் அமர்ந்திருந்தார்.


    Posted by விழியே பேசு... at 8:38 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ▼  November (512)
      • எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவ...
      • நடத்தையில் சந்தேகம்: நடிகைக்கு கத்திக்குத்து
      • மதுரையில் அழகிரியின் எம்.பி. அலுவலகம் பறிப்பு!
      • இளையராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்? :...
      • 2ஜி வழக்கு: ராசா மனதில் என்ன இருக்கிறது?
      • ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள...
      • அஜீத் வந்தா கொண்டாட்டம் !
      • ' ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்
      • கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களை கடலில் வெட்டி வீசுவ...
      • பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாத...தனுஷை கிண்டல...
      • அழகிரி வீட்டில் தங்கி வழக்கை எதிர்கொள்ளும் கனிமொழி
      • மீண்டும் வருகிறார் தமன்னா...!
      • 'ராஜபாட்டை' தியேட்டர்களில் 'நண்பன்' !
      • சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா
      • முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மகள் மரணம்
      • கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.
      • ஸ்ருதி இடத்தில் இலியானா! விலகினாரா!! விலக்கப்பட்டாரா?
      • அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி!
      • விடுதலையானார் கனிமொழி-டிச. 3ம் தேதி சென்னை வருகிறார்
      • ஏன் இந்த கொலைவெறி : கேரள படைப்பாளிகள் மீது தமிழ் ...
      • 3 - படத்தின் புகைப்படங்கள்
      • 'தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!
      • கொலைவெறி பாடலுக்கு மியூசிக் கம்போசிஷன் கூட தனுஷ் த...
      • மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தைய...
      • பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...
      • திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி
      • வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள...
      • மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!
      • சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!
      • பாடலாசிரியர் சினேகனுடன் எந்த தொடர்பும் இல்லை
      • குறைந்தபட்ச மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.40 லிருந்த...
      • அது போன மாசம்; இது இந்த மாசம்: சீமான் ( ஸ்பெஷல் வீ...
      • 'எக்ஸ்ட்ரா செக்ஸை' விரும்பும் இந்தியப் பெண்கள்!
      • சென்னையில் தியாகி கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பு ....
      • நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்
      • நயன்தாராவை ஜோடியாக்க பிரபல ஹீரோ முடிவு
      • 6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்
      • ராணாவிலிருந்து விலகும் தீபிகா படுகோன்?
      • வேற்று கட்சியினரின் தாய் தந்தையரை இழிவாக பேசிய சீமான்
      • கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!
      • கனிமொழிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?
      • சபரிமலையில் பரபரப்பு-ஆண் வேடத்தில் 18ம் படி ஏற முய...
      • ஒய் திஸ் கொலைவெறி டி' 3 படத்தில் ரஜினி
      • பாடல்களே இல்லாத அபாயம் படம்!
      • இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண...
      • நிர்வாணமாக நடிக்க தயார்- லட்சுமி ராய்!!
      • ஒட்டுமொத்த தமிழினத்தின் தாகமும் தமிழீழம்தான்! - வி...
      • சமுத்திரகனியின் சாட்டை
      • கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! -...
      • ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல்...
      • இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந...
      • கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற...
      • சச்சின் சதம் மிஸ் குரங்கு கொரில்லாவாக மாறிவிட்டது:...
      • விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா? பிரியங்கா சோப்ரா பதில்!
      • ரஜினியை இயக்கப்போகும் செல்வராகவன் !
      • தைமாதம் திருமணத் தேதியை அறிவிப்போம்: பிரசன்னா!!
      • 'மயக்கம் என்ன' video songs
      • ஆங்கில படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் கூட கிட...
      • 'இரண்டாம் உலகம்' :அனுஷ்காவுக்கு சூப்பர் ரோல் !
      • நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவ...
      • டேம் 999... தெரியாம நடிச்சிட்டேன்! - பம்மும் விமலா...
      • ' WHY THIS KOLAVERI DI 'க்கு போட்டியாக 'WHY THIS K...
      • அஞ்சலி அறிக்கை பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் ?
      • விறுவிறுப்பான மும்பை டெஸ்ட் 'த்ரில்' டிரா!
      • சுல்தான் தி வாரியர், கோச்சடையானா! - கே எஸ் ரவிக்கு...
      • அஜீத் விஜய் போல சிம்பு தனுஷ்?
      • காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்
      • கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
      • நான் வாயை திறந்தால் பலர் ஜெயிலுக்கு போவார்கள்; ஆ.ர...
      • ஜெயலலிதாவை விமர்சிப்பதா.. விஜயகாந்த் மீது சரத்குமா...
      • ரஜினியின் 'கோச்சடையன்' யார்?(வலைதளத்தில் முதல் முற...
      • டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மற...
      • "மங்காத்தா'னா தான் பிரச்னை "ரம்மி'னா கண்டுக்காதீங்...
      • ‘டேம் 999’ திருட்டு சிடி விபரீதம்! : திடுக்கிடும் ...
      • பவாரை தாக்கிய வாலிபர் ஆவேசம் மீண்டும் வந்து அடிப்பேன்
      • அதிமுக பிரமுகரின் காதை கடித்த தேமுதிக செயலாளர் கைது
      • தமிழ்நாடு சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
      • சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன...
      • ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! : திண்டுக்கல் பரபரப்பு
      • 'கொலவெறி' பாடலுக்கு பிரபலங்களின் பாராட்டுகளில் சி...
      • நீதிபதியின் கேள்வியும் ஜெயலலிதாவின் அண்டபுழுகு பதி...
      • 'ஏழாம் அறிவு' JOHNY TRI NGUYEN வில்லனானது எப்படி ?
      • விவாகரத்து தீர்ப்பின் போது இணைந்த தம்பதிகள்: தமிழ...
      • தலை சுற்றவைக்கும் மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்
      • 'புரட்சித் தலைவி' ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?:...
      • சிம்புவுக்கு வந்த சிக்கல்; ஒஸ்தி படம் தலைப்பு மாற்...
      • 'கொலைவெறி..'படலை தொடர்ந்து 2வது பாடலும் வெளியானது
      • ஸ்ரீபெரும்புதூரில் சீரடி சாய்பாபா படத்தில் இருந்து...
      • வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: எம்.எல...
      • மும்பை டெஸ்ட் - தமிழக வீரர் அஸ்வின் அபார சதம் - இந...
      • 'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமை...
      • டெல்லியிலேயே சட்டம்- ஒழுங்கு குலைந்துள்ளது நல்லதல்...
      • சரத்பவாருக்கு ஒரு அடி போதாது என்று நான் கூறினேனா?;...
      • மார்ச் மாதம் முதல் 'ஷாக்' அடிக்கும்!-மின் கட்டணம்
      • கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப...
      • 'கஜினி'யை வெல்வாரா சச்சின் டெண்டுல்கர்?
      • பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்
      • திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா கனிமொழி?
      • விளம்பரமே வெற்றிக்கு காரணம் !
      • இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்: அந்த பால் விக்கிற ...
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.