பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 58). பண்ணையபுரத்தைச் சேர்ந்த ஜீவா இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரி மகள் ஆவார்.
ஐதராபாத்தில் இசை அமைப்பு பணியில் இருந்த இளையராஜாவுக்கு ஜீவா மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தார். மனைவி உடலை பார்த்து அழுதார்.
தியாகராயநகரில் உள்ள வீட்டில் ஜீவா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, குமரி அனந்தன், மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசர், பழ. கருப்பையா எம்.எல்.ஏ., நடிகர்கள் பாக்யராஜ், ராஜேஷ், பார்த்திபன், சத்யராஜ், விஷால், கார்த்தி, தனுஷ், சாந்தனு, டைரக்டர்கள் பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஹரி, பாலா, நாஞ்சில் பி.சி. அன்பழகன், கவிஞர்கள் வைரமுத்து, வாலி, முத்துலிங்கம், பிறைசூடன், பா. விஜய், பழனிபாரதி, ரஜினி மனைவி லதா, சுகாசினி, குஷ்பு, இசை அமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார், சங்கர் கணேஷ், கங்கை அமரன், தயாரிப்பாளர்கள் பி.எல். தேனப்பன், உதயநிதி ஸ்டாலின், பாடகிகள் சின்மயி, மகதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஜீவா உடல் இன்று பிற்பகல் ஆம்புலன்சு மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை உடல் அடக்கம் நடக்கிறது.
இளையராஜா-ஜீவா தம்பதியருக்கு கார்த்திக்ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய இரு மகன்களும் பவதாரணி என்ற மகளும் உள்ளனர்.
No comments:
Post a Comment