கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம், ‘விஸ்வரூபம்’. பூஜா குமார், ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் தீவிரவாதியாக நடிக்கிறார் கமல். இதற்காக, ஆப்கானிஸ்தானைப் போல செட் அமைத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில், முஜாகிதீன்களாக ஆப்கானைச் சேர்ந்தவர்கள் 40 பேர் நடித்துள்ளனர். இதுபற்றி ஆப்கானை சேர்ந்த கலில் உர் ரகுமான் கூறும்போது, ‘‘செட்டை பார்க்கும்போது ஆப்கானிஸ்தானை பார்த்தது போலவே இருந்தது. மறுநாள் செட்டுக்கு வந்தபோது ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் போல உடையணிந்த ஒருவர் வந்தார். அவர் சாதாரண மனிதரைப் போல் இருந்தாலும் அவரைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது.
அவர்தான் கமல்ஹாசன் என்றார்கள். ஏழு நாட்கள் நடந்த ஷூட்டிங்கில் அவரிடம் 5 முறை பேசினோம். ஒவ்வொரு முறையும் அது அனுபவமாகவே இருந்தது. ‘அங்கு எப்படி நமாஸ் செய்வார்கள்’ என்று என்னை செய்ய சொன்னார். ஒரு முறை செய்துகாட்டியதும் அப்படியே செய்தார். இன்னொரு விஷயம் என்னவென்றால், நாங்கள் பேசும் பாஸ்டோ மொழியில் அவர் சில வார்த்தைகள் பேசியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது’’ என்றார். இந்தப் படத்தில் ரஷ்யா, ஈரான், ஆப்ரிக்காவை சேர்ந்தவர்களும் நடிக்கிறார்கள்.
No comments:
Post a Comment