திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வேலூர் உள்பட 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு புகாரில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூரில் உள்ள துரைமுருகன் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது.
காட்பாடியில் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. அருவி மினரல் வாட்டர் நிறுவனம், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது.
துரைமுருகனின் ஐடிசி சிகரெட் குடோன் உள்ளிட்ட 5 இடங்களிலும் சோதனை நடக்கிறது.
வண்டலூர் அருகே ஏற்றுமதி நிறுவனத்திலும் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏலகிரியில் உள்ள பண்ணை வீடும் அதிகாரிகள் சோதனைக்கு தப்பவில்லை.
No comments:
Post a Comment