பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹெர்ஜே என்கிற ஓவியரால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரம் 'டின் டின்'. பால் வடியும் முகம், ஸ்பைக் ஹேர் ஸ்டைல், ஸ்மார்ட் டிரெஸ்ஸிங், நிறைய புத்திசாலித்தனம், கொஞ்சம் குழப்பம், கூடவே 'ஸ்நோயி' என்கிற ஒரு நாய். சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத, நல்லதுக்குத் துணை நின்று, கெட்டதுக்கு கெட்-அவுட் சொல்லும் கேரக்டராக கொண்டு 1929ம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் தொகுப்பு 'டின் டின்'. முதல் கார்ட்டூன் தொகுப்பே செம ஹிட்.
டின்டினை இளம் நிருபராக்கி, துப்பறியும் வேலைகளுக்கு அனுப்பினார் ஹெர்ஜே. அவனுக்கு நிறைய மொழிகள் தெரியும். அதனாலேயே பல நாடுகளுக்கும் பறப்பான். டாங்க், விமானம், ஹெலிகாப்டர், குதிரை எனச் சகலமும் லைசென்ஸ் இல்லாமலேயே ஓட்டத் தெரியும். தண்ணீரில் சம்மர் சால்ட் அடிப்பான். யோகா தெரியும். கை செம ஸ்ட்ராங். ஓங்கி அடித்தால் எதிரிக்கு உச்சா வந்துவிடும். அவனுக்குச் சொந்தக்காரர்கள் என்று யாரும் கிடையாது. எதிரி எதை வைத்து மிரட்ட முடியும்? பல நாடுகளுக்குப் பறந்து, மர்மங்களை உடைத்து, எதிரிகளைத் துவைத்துத் தொங்கப்போட்டான் டின்டின்.
எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் ஏதாவது ஒரு நெகட்டிவ் பாயின்ட் இருக்குமே! ஜேம்ஸ் பாண்டுக்கு பெண்கள் சகவாசம் மாதிரி டின்டினுக்கு ஆழ்ந்த சிந்தனை. அப்படி சிந்தனை வயப்படும்போது சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடுவான். முக்கியமான திரைக்கதைத் திருப்பங்களுக்கு டின்டினின் இந்த நெகட்டிவ்வைப் பயன்படுத்திக்கொண்டார் ஹெர்ஜே. கதையைப் படிக்கும்போது பி.பி. ஏற, சேல்ஸ் எகிறியது. 80 மொழிகளில் 350 மில்லியன் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. டின்டினும் ஸ்நோ நாயும் மக்களின் ஆதர்ச நாயகர்கள் ஆகிவிட்டார்கள். டி-ஷர்ட்கள், காபிக் கோப்பைகள் என எங்கும் எதிலும் டின்டின்தான்.
இந்த கார்ட்டூனின் அதீத ரசிகரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 'THE ADVENTURES OF TINTIN' என்று ஒரு படத்தினை உருவாக்கி இருக்கிறார். டின் டின் தீவிர ரசிகர்கள் அனைவருமே எப்போது இத்திரைப்படம் வெளிவர போகிறது என்று காத்து கிடக்கிறார்கள். நவம்பர் 11ம் தேதி இப்படம் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் மொத்த உரிமையையும் வாங்கி வெளியிட இருக்கிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். தனது போட்டான் கந்தாஸ் நிறுவனம் மூலம் இப்படத்தினை வெளியீட தீர்மானித்து இருக்கிறார்.
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருக்கிறது 'டின் டின்'.
No comments:
Post a Comment