இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட படம் 'ஆதாமிண்டே மகன் அபு'. சலீம் அகமது என்ற இளம் இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நாயகனாக நடித்த சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
தமிழ் திரையுலகில் தற்போது ஒரு புது தகவல் பரவி வருகிறது. 'ஆதாமிண்டே மகன் அபு' பட இயக்குனர் சலீம் அகமது, நடிகர் விக்ரமை தொடர்பு கொண்டு, தான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டாராம்.
1520 முதல் 1600 ஆண்டு வரை கோழிகோட்டில் வாழ்ந்த சாமுத்திரி ராஜா என்பவரிடம் தளபதியாக இருந்தவர் குஞ்சலி மாராக்கர். ஒரு இந்து அரசரிடம் ஒரு முஸ்லீம் தளபதியாக இருந்து அவருக்காக போர்ச்சுகீச படையினரிடம் போரிட்டாராம். இருக்கிறார். இந்த வரலாற்று பதிவை படமாக்க முடிவு செய்து இருக்கிறாராம் சலீம்.
இதில் குஞ்சலி மாராக்கர் பாத்திரத்தில் நடிக்க விக்ரமை அணுகி இருக்கிறாராம் சலீம். இப்படத்தில் ஒரு ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்க முன்வந்து இருப்பதாக கூறி வருகிறார்கள்.
No comments:
Post a Comment