ரஜினியுடன் நடிக்க எல்லா நடிகைகளுக்கும் விருப்பம் உண்டு. சமீபகால முன்னணி நாயகிகளான நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோருக்கு அவ்வாய்ப்பு கிட்டியது. நயன்தாரா சந்திரமுகியிலும், ஸ்ரேயா சிவாஜியிலும் ஜோடியாக நடித்தனர். ஆனால் அசினுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுகுறித்து அசின் கூறும் போது, ரஜினியுடன் நடிக்க இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது. அவர் திரையுலகில் ஒரு ஜாம்பவான். பல்வேறு படவிழாக்களில் ரஜினியை சந்தித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை கூறுவார். விரைவில் அவருடன் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
நான் சொத்துக்கள் வாங்கி குவிப்பதாக கூறுகிறார்கள். அப்படி செய்வதில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஆனாலும் எனது பெயரில் சில சொத்துக்கள் வாங்குவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. கொச்சியில் 6 பெட்ரூம் அபர்ட்மென்ட் ஒன்றை விலைக்கு வாங்கினேன். ஏற்கனவே அங்கு எனக்கு இன்னொரு வீடும் இருக்கிறது. இந்த 6 பெட்ரூம் அபார்ட்மென்ட் வீடு கடற்கரை அருகில் உள்ளது. வீட்டில் இருந்து வெளியே பார்த்ததால் ரம்மியமான அழகை ரசிக்கலாம்.
எனது பெற்றோர் மும்பையில் என்னுடனேயே வசிக்கின்றனர். அவர்கள் மாதந்தோறும் கொச்சி வீட்டுக்கு சென்று வருகிறார்கள். நானும் படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த வீட்டில் சென்று தங்க திட்டமிட்டு உள்ளேன். சினிமாவிலும் வெளியேயும் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களையும் கொச்சியில் புதிதாக வாங்கிற அபார்ட்மென்ட் வீட்டுக்கு அழைத்து செல்ல ஆர்வமாக இருக்கிறேன்.
தென்னிந்திய மொழிகளில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன். இந்தியில் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பது சகஜமாக உள்ளது. ஆனால் தென்னிந்திய மொழிப்படங்களில் அப்படி இல்லை. ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கென தனித்தனி ரசிகர்களை வைத்திருப்பதால் சேர்ந்து நடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.
இவ்வாறு அசின் கூறினார்.
No comments:
Post a Comment