காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக
ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித்
தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை
செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக
ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
இதைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணிய சாமி சமூக வலைதளமான ட்விட்டரில். சோனியா காந்தியின்
அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணத்தை யார் கட்டியது? என்பது குறித்து விரைவில் பொது நலன்
வழக்கு தொடர இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக
சென்றார். அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சோனியாவுக்கு என்ன
நோய் என்றோ அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றோ கூறப்படவில்லை.
அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டியது என்று அமைச்சர்
அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.
அண்மையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியும் சோனியா அமெரிக்கா சென்று ஒருவாரம் இருந்துவிட்டு
திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலத்திலிருந்து, நீதிக்கு முன்பு இவர்களால் தப்பிக்கவே இயலாது..
ReplyDeleteஅவ்வளவு செலவு செஞ்சு வைத்தியம் பாக்குற அளவுக்கு அந்த அம்மாவுக்கு அப்படி என்னப்பா அவ்வளவு பெரிய வியாதி....????????அப்புறம் ஒரு ரகசியம் சொல்லுறேன் கேட்டுகோங்க.....இது (நாடு) அந்த அம்மாவோட புருஷன் வீட்டு சொத்துப்பா....
ReplyDelete