மறைந்த நடிகை செளந்தர்யாவின் ரூ. 50 கோடி சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும்
சண்டை நடந்து வருகிறதாம்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் நடிகை செளந்தர்யா. கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்
படங்களில் நடித்தவர். அழகான, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றவர்.
கடந்த 2004ம் ஆண்டு பாஜக தேர்தல் பிரசாரத்திற்காக ஆந்திராவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதில் செளந்தர்யா மரணமடைந்தார்.
அந்த விபத்தில் அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் செளந்தர்யாவின் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே
பெரும் மோதல் மூண்டுள்ளது. செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, செளந்தர்யாவின் முன்னாள் கணவர் ராஜு
ஒருபக்கமாகவும், அமர்நாத்தின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் மகன் சாத்விக் ஆகியோர் மறுபக்கமாகவும் பிரிந்து
நின்று மோதி வருகின்றனராம்.
செளந்தர்யா மரணமடைந்தபோது அவருக்குச் சொந்தமாக 6 சொத்துக்கள் இருந்துள்ளன. இது போக
தங்க நகைகள் உள்ளிட்ட பிற சொத்துக்கும் இருந்தன. தனது சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயிலை
விட்டுச் சென்றிருந்தார் செளந்த்ர்யா. அதில் ஒரு வீட்டை அவர் தனது சகோதரர் மகன் சாத்விக்
பெயரில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வீடு பாதி கட்டப்பட்ட நிலையில்
இருந்தது. ஆனால் இந்த வீடு தான், செளந்தர்யா மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள ஒரு ஜாயிண்ட்
பிராப்பர்ட்டி என்று செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா தற்போது கூறுகிறார்.
அதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒரு சொத்தை குடும்பத்தினர் அனைவரும் சமமாக பிரித்துக்
கொள்ள வேண்டும் என்று செளந்தர்யா கூறியுள்ளார். மேலும் 2 சொத்துக்களை தனது கணவருக்கும்,
குழந்தைகளுக்கும் அவர்
எழுதி வைத்திருந்தார்.
சாத்விக் தனது அத்தை செளந்தர்யா தனது பெயரில் எழுதி வைத்திருந்த சொத்தை கையகப்படுத்த
முயன்றபோது செளந்தர்யாவின் தாயார் தை எதிர்த்ததால், சாத்விக் கோர்ட்டுக்குப் போய் விட்டார்.
இந்த மோதல் மேலும் முற்றி இருதரப்பினரும் காவல் நிலையம் வரை போக நேரிட்டுள்ளது.
செளந்தர்யாவின் கணவரான ராஜு, செளந்தர்யாவின் மரணத்திற்குப் பின்னர் இன்னொரு கல்யாணம் செய்து
கொண்டார். ஆனால் தற்போது செளந்தர்யாவின் சொத்துக்காக அவரது தாயாருடன் வந்து ஒட்டிக்
கொண்டிருப்பதாக நிர்மலா தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment