ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பின் சினிமாவில் நடிக்கவில்லை. உடம்பு குண்டானதால்
உடற்பயிற்சி செய்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மணிரத்னம் இயக்கும்
படத்தில் விரைவில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 1997-ல் ‘இருவர்’ படத்திலும் 2007-ம் ஆண்டு ‘குரு’ படத்திலும் 2010-ல் ‘ராவணன்’ படத்திலும் நடித்தார். மீண்டும்
4-வது தடவையாக புதுப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் தற்போது கடல் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படம் முந்ததும் ஐஸ்வர்யாராய்
படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை மணிரத்னத்தின் மனைவியும்,
நடிகையுமான சுஹாசினி
மறுத்தார்.
அவர் கூறும் போது, மணிரத்னம் ‘கடல்’ படத்தை
இயக்கும் பணியில் முழு ஈடுபாட்டுடன் உள்ளார். இந்த படம் ரிலீசான பிறகுதான் அடுத்த படம்
பற்றி யோசிப்பார். புதுப்படத்துக்கான கதையை உருவாக்க எட்டு மாதத்துக்கு மேல் எடுத்துக்
கொள்வார். எனவே அவரது அடுத்த படம் பற்றி வரும் செய்திகள் எதுவுமே உண்மையானது அல்ல.
ஐஸ்வர்யாராய் படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்றார்.
No comments:
Post a Comment