முதல்வர்
ஜெயலலிதாவை இன்று சந்தித்த தேமுதிக
எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனின் நந்தன்குளம் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.
ராதாபரம்
தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்எல்ஏ
மைக்கேல் ராயப்பன் இன்று தமிழக முதல்வரை
நேரில் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு
எதிராக பேட்டிகளும் கொடுத்து வருகிறார். இனி புதிய தலைமையில்
செயல்படப் போவதாக அவரும் அருண்பாண்டியனும்
தெரிவித்துள்ளனர்.
இதனால்
ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் சிலர்,
திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தன்குளத்தில் உள்ள
மைக்கேல் ராயப்பனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து
தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்தனர். அதற்குள் வீட்டை முடிந்தவரை சேதப்படுத்திவிட்டு
ஓடிவிட்டனர் தேமுதிகவினர்.
No comments:
Post a Comment