காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட்
வதோரா மீது சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவால், அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சோனியா
காந்தியின் மருமகனான ராபர்ட் வதோரா, முன்னணி கட்டுமான நிறுவனமான
டி.எல்.எப். நிறுவனத்திடம் இருந்து சொத்து வாங்கியுள்ளார். டி.எல்.எப்.
நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்துக்களை மிக குறைந்த
விலைக்கு வதேராவிடம் விற்றுள்ளது.
அதுவும் ரூ.300
கோடி மதிப்பிலான சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்திற்கு வழங்கியிருக்கிறது.
இதுதவிர பணமும் வழங்கியிருக்கிறது. 2007-2010 காலகட்டத்தில் ரூ.50 லட்சம்
கொடுத்து வதேரா வாங்கிய சொத்துக்களின் மதிப்பு 3 ஆண்டுகளில் ரூ.300
கோடிக்கு வளர்ந்துள்ளது.
இந்த சொத்துக்களை ராபர்ட்
வதேதா தனது தாயார் பெயரில் உள்ள நிறுவனங்களுக்காக வாங்கியதாக கணக்கு
காட்டியிருக்கிறார். இதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதற்கான பத்திர
ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
மேலும் வதேரா வாங்கிய
சொத்துக்களுக்கான பணப் பரிமாற்றங்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்
நடைபெற்றுள்ளன. எனவே, இந்த முறைகேடுகளை யார் விசாரிப்பார்?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனால்
இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த
குற்றச்சாட்டை கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியுள்ளார். இதற்கு வதேரா ஏற்கனவே
விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தான் முறையாக வருமான
வரி செலுத்துவதாகவும், அந்த சொத்தில் முழு உரிமை உள்ளது என்றும் கூறினார்.
இதில் காங்கிரசை இழுப்பது நியாயமற்றது. எதுவுமே சட்டவிரோதமாக நடக்காதபோது
யாருக்கு எதற்காக பதில் சொல்லவேண்டும்? என்று காங்கிரஸ் எம்.பி. சந்தீப்
தீட்சித் கூறினார்.
No comments:
Post a Comment