தமிழக சட்ட மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருந்து வந்த சி.வி.சண்முகத்தின்
அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கு அவர் மீதான எந்த அதிருப்தியும் காரணம் இல்லை என்று
கூறப்படுகிறது. அவருக்கு துணை சபாநாயகர் பதவி கொடுப்பதற்காகத்தான் பதவியைப் பறித்துள்ளார்
முதல்வர் ஜெயலலிதா என்கிறார்கள்.
இன்று காலையில் தான் சி.வி.சண்முகத்திடமிருந்து விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர்
பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் மாலையில் அவரது அமைச்சர் பதவியையும் பறித்தார்.
இது அதிமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
காரணம், சி.வி.சண்முகம் அம்மாவின் நல்லெண்ணைத்தைப் பெற்றவர், அவரைப் போய் ஏன் நீக்கினார்கள் என்று
அதிமுகவினர் குழம்பியுள்ளனர். ஆனால் அதிருப்தியாலோ அல்லது கோபத்தாலோ சண்முகத்தை ஜெயலலிதா
நீக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு துணை சபாநாயகர் பதவியை ஜெயலலிதா தரக் கூடும்
என்றும் பேச்சு அடிபடுகிறது. இதனால்தான் கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து
அவரை ஜெயலலிதா நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
மர கழண்டு போச்சு.....
ReplyDelete