2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசாவும் (தி.மு.க.), காமன்வெல்த்
விளையாட்டு ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடியும் (காங்கிரஸ்) சிக்கினார்கள்.
இருவருமே கைதாகி, பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில்
விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இப்போது அவர்களுக்கு புதிய பதவி
கிடைத்துள்ளது. அந்தப் பதவி, பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி ஆகும்.
ஆ. ராசா, எரிசக்திதுறைக்கான நிலைக்குழு உறுப்பினர்
ஆக்கப்பட்டுள்ளார். சுரேஷ் கல்மாடிக்கு வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழு
உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி,
உள்துறைக்கான நிலைக்குழு உறுப்பினராகவும், மற்றொரு தி.மு.க. எம்.பி.,
திருச்சி சிவா, தொழில் துறைக்கான நிலைக்குழு தலைவராகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமளும் ஊழல் செய்வோம் வாருங்கள்...அவங்க அளவுக்கு செய்யமுடியாது....... இருந்தாலும் ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை.....ராசாவுக்கு எள்ளு உருண்டை என்பது 2Gயில 1760000000000000 0000000000 கோடி( ஒரு வருஷம் ) மன்மோஹனுக்கு நிலக்கரி 20000000000000000000 கோடி சாட்டிலைட் 2000000000000000000000கோடி( இதுவரைக்கும் ஒன்னும் இல்ல) கனிக்கு223( கோடி 6 மாசம் ).....(ஆனா 533 ஊழல் தயா பிரதர்ஸ் இன்னும் வெளிய இருக்காங்கப்பா...)ஆகவே நாமளும் ஊழல் செய்வோம்...மன்மோஹன் மன்சு இறங்கி நமக்கும் ஏதாவது பதவி கொடுக்கமாட்டாரா.. ...??????
ReplyDelete