விழுப்புரம் மாவட்டம் பூந்துரை கிராமத்தில் செம்மண் குவாரியில் மோசடி
நடந்து இருப்பதாக வானூர் தாசில்தார் போலீசில் புகார் செய்தார். அதில் அரசு
அனுமதித்த 10 அடிக்கு பதிலாக 40 அடி ஆழத்துக்கு செம்மண் எடுக்கப்பட்டு
இருப்பதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு
இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பொன்முடி, கவுதம சிகாமணி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பொன்முடியை கைது செய்வதற்காக போலீசார் அவரை தேடி வருகிறார்கள். விழுப்புரம், சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலும் தேடி வருகிறார்கள். ஆனால் அவரை கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் குமார் ஆகியோர் சார்பில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருடைய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ேபசாம ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சிடுங்க சார்
ReplyDelete