காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக மத்திய
அரசு ரூ3 லட்சத்தை
மட்டுமே செலவு செய்திருக்கிறது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப்பயணங்களுக்காக
அரசு கருவூலத்தில் இருந்து பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோனியா காந்தியின் சிகிச்சைக்காக ரூ1,880 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று வெளியான தகவல்களில் உண்மை
எதுவும் இல்லை. ஊடகத் தகவல்களை ஏற்கனவே தலைமை தகவல் ஆணையர் மறுத்துள்ளார். கடந்த 8
ஆண்டுகளில்,
பெல்ஜியம் அரசு ஒரு
தேசிய விருதினை அறிவித்து, அதை பெற்றுச்செல்வதற்காக விடுத்த அழைப்பின்பேரில், சோனியா சென்று வந்த செலவுகளை
மட்டுமே இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் ஏற்றது. அதுவும் செலவு ரூ.3 லட்சத்துக்குள்தான். மேலும்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி
தலைவரின் இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளுக்காக அரசு எந்த செலவும் செய்தது
இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மீதி செலவெல்லாம் 2G பணத்துல செஞ்சதாம்மா......சோனியாம்மா...????????
ReplyDelete