நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இப்படம் இந்தி, தமிழில் இன்று ரிலீசானது. பழைய சினிமா அனுபவங்கள் குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது:-
சிறு வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். குழந்தையாக இருந்த போது ஒரு படத்தில் 'முருகன்' வேடத்தில் நடித்தேன். அப்போது
சினிமா பற்றியே தெரியாது. அது ரிலீசான பிறகு நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக
நடித்தேன்.
இதனால் பள்ளியில் படிக்க முடியாமல் போனது. எனது தந்தைக்கு நான் நடிகையாகவது பிடிக்காமல்
இருந்தது. அம்மா சம்மதித்தார். பாலச்சந்தர் படங்களில் நடித்தபோது காதல் காட்சிகளில்
எனக்கு நடிப்பு வரவில்லை. காதல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று சொல்லி
கொடுத்தார். ஆனாலும் வரவில்லை.
பிறகு அழுவதுபோல் முகத்தை வைத்துக் கொண்டால் காதலிப்பது போல் உள்ளது. இனிமேல் காதல்
சீன்களில் அழுகை வருவது போல் முகத்தை காட்டு என்றார். அன்று முதல் காதல் சீன்களில்
அழுவதுபோல் மூஞ்சியை காட்டி நடித்தேன்.
இந்தியில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது உடல்நலம் குன்றிய என் தந்தையை பார்க்க
வரமுடியவில்லை. எனது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் ஆஸ்பத்திரியில்
அனுமதித்தேன். அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதுதான் போனி கபூரை சந்தித்தேன்.
என் தாய் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் தயாரித்த
மிஸ்டர் இந்தியா படத்தில் நடித்தேன். அன்று முதல் பத்து வருடங்களாக என்னை காதலித்தார்.
அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததும் நிறையபேர் எதிர்த்தார்கள்.
போனிகபூரிடம் எனது வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்று உணர்ந்ததால் திருமணம்
செய்து கொண்டேன். இன்றுவரை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.
No comments:
Post a Comment