லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் முயாம்மர் கடாபி (69).
துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று
லிபியாவிலும் கடாபி பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அப்போது ஆப்பிரிக்க கூலிப்படையினரை வைத்து போராட்டக்காரர்களை
கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, அதிபர் கடாபியின் வெளிநாட்டு
கணக்குகள் முடக்கப்பட்டன.
இதனால் அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகள், லிபியா மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஒரு கட்டத்தில்
கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி அரசுப் படைக்கு எதிராக சண்டையிட்டனர்.
கடாபியின் மகனை சிறைப் பிடித்தனர். அப்போதைய நிலைமையை சமாளிக்க
அரண்மனையிலிருந்து ஓடி தலைமறைவானார் கடாபி.
கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் 20ம்தேதி, தனது சொந்த ஊரான சிர்டியில், கால்வாய்
ஒன்றில் மறைந்திருந்த போது, நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள்,
கடாபியை சுற்றி வளைத்தனர். கடாபி சரணடைய முன்வந்த போதும், அவர் சரமாரியாக
சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பிரான்ஸ்
அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோசியின் உத்தரவின் பேரில், கடாபியை
சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய
வந்து உள்ளது. இதுபற்றிய செய்தியை "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை
வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment