இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரர் தெண்டுல்கர் 23 ஆண்டுகளாக
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். 100 சதங்கள் என்ற
சாதனையை நிறைவு செய்த பிறகு, அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்
என்று ஒரு பிரிவினரும், தொடர்ந்து விளையாட வேண்டும் என்று மற்றொரு
தரப்பினரும் பரபரப்பான பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தனது நிலை என்ன? என்பது பற்றி இதுநாள் வரை மழுப்பலாகவே கருத்து கூறி வந்த அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.

இதுபற்றி தெண்டுல்கர் அளித்த பேட்டி வருமாறு:-
கடந்த 22 ஆண்டுகளாக நமது நாட்டுக்காக நான் விளையாடி வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது பெருமிதமும், கவுரவமும் மிக்கதொரு செயலாகும். என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதை நான் உணரும்போது, விளையாடுவதை நிறுத்திக் கொள்வேன்.
நான் ஓய்வு பெற வேண்டும் என கூறுகின்றனர். ஓய்வு விஷயத்தில் என் மனம் கூறும்போக்கில் செல்லவே நான் விரும்புகிறேன். தற்போது வரை நான் நல்ல நிலையில் உள்ளதாகவே என் மனம் கூறுகின்றது. வரும் நவம்பர் மாதத்தில் நான் விளையாடிய பிறகு மீண்டும் ஒருமுறை என் மனம் என்ன சொல்கிறது என மறுஆய்வு செய்வேன்.
நான் விளையாடுவதை நிறுத்தும்போது நாம் சரியாக விளையாடவில்லையோ? என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதை நான் விரும்ப வில்லை. ஓய்வு என்பது எனக்கு கடினமானதாக இருக்கும் என கருதுகின்றேன்.
ஏனென்றால் ஓய்விற்கு பிறகு என்ன செய்வது என்பது குறித்து நான் இதுவரை முடிவு செய்யவில்லை. என்னால் முடியும் என்ற எண்ணம் உள்ளவரை விளையாட்டில் தொடர்ந்து நீடிப்பேன். வெற்றியை அடைவதற்கான குறிக்கோள் என்னிடம் உள்ளதா? அணியின் உச்சவரிசையில் நீடிப்பதற்கான தகுதிக்கு நான் உரியவன் தானா? என்பதை நமது அணியினர் உணர்வதை பொருத்தும் எனது ஓய்வு திட்டம் இருக்கும்.
என்னை பற்றி மற்றவர்கள் கூறும் கருத்துகளில் இருந்து எப்போதுமே நான் விலகி நிற்க விரும்புகின்றேன். நம்மை விமர்சிப்பவர்களையும், துதிப்பவர்களையும் பற்றி கவலைப்படாமல் அதிக கவனத்துடன் விளையாட்டில் முன்னேற வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.
வரும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது ஓய்வு பற்றி அறிவிப்பேனா? என்பது குறித்து இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அடுத்த மாதத்திற்கு பிறகு எனது விளையாட்டின் போக்கை நானே மறுமதிப்பீடு செய்து ஓய்வு பற்றியும், எதிர்கால திட்டம் பற்றியும் முடிவு எடுப்பேன்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

தல உங்க ைைைைைைைபயங்கூடயங்கூயங்கயங்யஙய ஒருேமச்சு ஆடுங்க
ReplyDeleteஅப்புரம் பாக்கலாாம்