மருத்துவம், விஞ்ஞானம், இலக்கியம், உலக சமாதானம் உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் உலக சாதனை படைக்கிறவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி
சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் 2012-ம் ஆண்டுக்கான, உலக சமாதான நோபல்
பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை டெல்லியை தலைமையிடமாக கொண்டு
செயல்படும் சர்வதேச விழிப்பூட்டும் மையம் (ஐஏசி) செய்துள்ளது.
சோனியாவின்
பெயர் தொடர்ந்து 9-வது முறையாக பரிந்துரைக்கப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது. இது குறித்து சர்வதேச விழிப்பூட்டும் மையத்தின் தலைவர்
மஜாஜ் முங்கெரி கூறுகையில், "சோனியா காந்தி மிகப்பெரிய உலக சமாதான ஆர்வலர்.
மிகப்பெரிய சமூக ஆர்வலரும் ஆவார். எனவே அவருக்கு சமாதானத்துக்கான நோபல்
பரிசு வழங்கும்படி சிபாரிசு செய்துள்ளோம்'' என்றார்.
No comments:
Post a Comment