காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்க நாடாளுமன்றத்தில்
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்
தலைவர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மமதா பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து நீடிக்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தயாராக இருக்கிறோம். இதற்கு
சமாஜ்வாதி கட்சி போன்றவை ஆதரவு தர வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத முடிவுகளை
எதிர்த்து தீர்மானமும் கொண்டு வர இருக்கிறோம்.
மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 22, 23 ஆகிய நாட்களில் 48 மணி நேர தர்ணா போராட்டம்
நடத்தப்படும். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். சிறைக்குப் போகவோ அல்லது மரணத்தை தழுவவோ
நான் தயார். துப்பாக்கி குண்டுகள் எனது உடலை துளைத்தாலும் அதை எதிர்கொண்டு,
நாட்டு மக்களுக்காக
சாலையில், கொளுத்தும்
வெயிலில் அமர்ந்து பணியாற்றுவேன் என்றார் அவர்.
மம்தா பானர்ஜி பேசிக்கொண்டு இருந்தபோது மேடைக்கு அருகே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதை குறிப்பிட்டு பேசிய மம்தா, இந்த போராட்டத்தின்போது குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசு தங்கள்
ஆட்களை அனுப்பி இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருப்பதாகவும், போராட்டம் அமைதியாக நடைபெற
மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment